நீண்ட நாள் தோழியை நாளை கரம் பிடிக்கும் பிரபல இந்திய  கிரிக்கெட் வீரர் 

இந்திய அணி பிரபல சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது நீண்டகால தோழியை நாளை திருமணம் செய்ய உள்ளார். 

Mar 13, 2026 - 10:00
0 516
நீண்ட நாள் தோழியை நாளை கரம் பிடிக்கும் பிரபல இந்திய  கிரிக்கெட் வீரர் 
பிரபல கிரிக்கெட் வீரருக்கு நாளை திருமணம்

டி20 உலகக்கோப்பையை  இந்திய அணி சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றதுள்ளது. டி20 இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெற்றிருந்தார். டி20 உலகக்கோப்பைக்கு பிறகு தனது திருமண நடத்த முடிவு செய்திருந்தார். அவரின்  நீண்ட கால தோழியான வான்ஷிகாவை நாளை அவர் மணமுடிக்க உள்ளார். 

உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் இந்தத் திருமணம் விமர்சையாக நடைபெறவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 4, 2025 அன்று லக்னோவில் மிக எளிமையாக நடைபெற்றது.இவர்களது  திருமணம் நவம்பர் 2025-லேயே நடைபெறவிருந்தது. ஆனால், டி20 உலகக்கோப்பை தொடரில் குல்தீப் கவனம் செலுத்த வேண்டி இருந்ததால், திருமணத்தை குல்தீப் யாதவ் ஒத்தி வைத்து இருந்தார். 

குல்தீப் யாதவ் தற்போது திருமணம் செய்ய உள்ள வான்ஷிகா சிறுவயது தோழி ஆவார். இவர்கள் இருவரும் கான்பூரைச் சேர்ந்தவர்கள். வன்ஷிகா தற்போது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். நாளை திருமணத்தை தொடர்ந்து, மார்ச் 17-ந் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Reception) நடைபெற உள்ளது.

இதில் பிசிசிஐ அதிகாரிகள், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User