முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும்-சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் அமைச்சருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் போதிய ஆதாரங்கள் இல்லை என தீர்ப்பு

Dec 26, 2023 - 15:03
0 234
முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும்-சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 2021ம் ஆண்டு போட்டுயிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் ஒ.எஸ். மணியனின் வெற்றியை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார்.அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தொகுதி முழுவதும் 60 கோடி ரூபாய் அளவிற்கு பணப்பட்டுவாடா செய்துள்ளதாகவும், இருவேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டியும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன் விநியோகித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சுமார் 7,000 பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

 அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, கடந்த நவம்பர் 20ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ஒ.எஸ் மணியன் தேர்தலில் வெற்றி பெற்றதை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும், முன்னாள் அமைச்சருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User