எலக்ட்ரிக் பைக் தீ விபத்து- 10 வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்

அடுத்தடுத்து 10 வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jan 06, 2024 - 16:57
0 157
எலக்ட்ரிக் பைக் தீ விபத்து- 10 வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்

திருவாலங்காடு அருகே எலக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த  பேரம்பாக்கம் பகுதியைச்சேர்ந்த வழக்கறிஞர் ஷர்மிளா. இவர் பயன்படுத்தி வரும் எலக்ட்ரிக் பைக்கில் சார்ஜ் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் வீட்டின் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3  புதிய  இருசக்கர வாகனங்கள் மற்றும் பயன்பாட்டிற்கு வைத்திருந்த 2 கார்கள் 1 டிராக்டர், 4  இருசக்கர வாகனங்கள் என 10 வாகனங்களும்  தீயில் எரிந்து சேதமடைந்தது.

இது தொடர்பாக மப்பேடு காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.எலக்ட்ரிக் வாகனத்தில் சார்ஜ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் அடுத்தடுத்து 10 வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User