எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்பமா? திமுக துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு

Feb 15, 2024 - 16:38
0 277
எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்பமா? திமுக துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுக வேட்பாளர்கள் அதற்கான விண்ணப்பங்களை வரும் 19 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம் என கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2024 முதல் 7-3-2024 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் - ரூ. 50,000/-. விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.2,000/- வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User