“நெஞ்சு பொறுக்குதில்லையே!” என பொங்கிய இயக்குநர் பாக்யராஜ்; பொய்யான தகவல் என மறுப்பு தெரிவித்த காவல்துறை

கடந்த 2 ஆண்டுகளில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற வில்லை என திட்டவட்டம்

Feb 14, 2024 - 08:57
0 347
“நெஞ்சு பொறுக்குதில்லையே!” என பொங்கிய இயக்குநர் பாக்யராஜ்; பொய்யான தகவல் என மறுப்பு தெரிவித்த காவல்துறை

இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் வெளியிட்ட வீடியோ அடிப்படை ஆதாரமற்றது - காவல்துறை விளக்கம்

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் நேற்று முன்தினம் தனது எக்ஸ் தள பக்கத்தில் “நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள அம்பரம்பாளையம் ஆற்றில் குளிக்க செல்பவர்களை சிலர் மூழ்கடித்து கொலை செய்வதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவர்களின் உடலை மீட்க பணம் பெருவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. 

பாக்யராஜின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், இதுபோன்ற வழக்குகள் ஒன்று கூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார். பத்ரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஆற்றில், கடந்த 2 ஆண்டுகளில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற வில்லை என்றும் அவர் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 2
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User