தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை:காரணம் என்ன?-போலீசார் விசாரணை

கோபி கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Jan 18, 2024 - 14:53
Updated: 3 years ago
0 281
தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை:காரணம் என்ன?-போலீசார் விசாரணை

திட்டக்குடி அருகே தோனியில் தீவிர ரசிகர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன்.  இவருக்கு அன்பரசி என்ற மனைவியும், கிஷோர் (வயது 10) மற்றும் சக்திதரன் (வயது 8) என்ற மகன்கள்  உள்ள நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இவர் கிரிக்கெட் பிளேயர் தோனியின்  தீவிர ரசிகர் ஆவர். சி.எஸ்.கே அணியின் வண்ணத்தில் வீட்டின் கலரை மஞ்சள் நிறத்தில் மாற்றியவர். வீடு முழுவதும் தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளதால் தோனியின் ரசிகர்கள் பலர் இவரது வீட்டை வந்து பார்த்து செல்வது வழக்கம்.

இவ்வாறு தோனியின் மீது தீவிர பற்று கொண்டிருந்தார்.இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் உடலை கைப்பற்றி ராமநத்தம் போலீசாரிடம் உடலை  திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்இது கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தியதில் நேற்று இரவு கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கோபி கிருஷ்ணனுக்கும் அதோ ஊரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும்  கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.  முன்விரோதம் காரணமாக விளையாட்டு போட்டியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபிகிருஷ்ணனை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்  கோபி கிருஷ்ணன் அதிகாலை வீட்டில் மின் விசிறியில் சடலமாக தொங்கி உள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் கோபி கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தோனியின் ரசிகர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User