மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகள் கைது

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பர்வீன்பானுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dec 11, 2023 - 15:43
Updated: 3 years ago
0 197
மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகள் கைது

கணவனை ஜாமீன் எடுக்க முயற்சி செய்த மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகளை  போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள கழுகபுளிக்காட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ்.இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி பர்வீன்பானுவுக்கும் குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் பர்வீன்பானுவை ஜேம்ஸ் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் மனைவி பர்வீன் பானு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் ஜேம்ஸை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயிலில் உள்ள தனது மகனை ஜாமீன் எடுக்க அவரது தாய் ஆரோக்கியமேரி முயற்சி செய்து உள்ளார்.இது பர்வீன்பானுக்கு பிடிக்கவில்லை.இதனால் மருமகளுக்கும் - மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த மருமகள் ஆரோக்கிய மேரியை அரிவாளால் வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆரோக்கிய மேரி துடிதுடித்து இறந்தார்.

இதுபற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆரோக்யமேரியின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பர்வீன்பானுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குடும்ப சண்டை காரணமாக மாமியாரை மருமகள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User