அமைச்சர் சரத்குமார் பதவி விலகக்கோரி திமுக ஆர்ப்பாட்டம்: போலீசார் அனுமதி மறுப்பு 

அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக மாணவரனி நடத்த இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு. போராட்ட ஏற்பாடுகள் செய்ய வந்த திமுகவினரை  போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Jun 29, 2026 - 02:45
0 290
அமைச்சர் சரத்குமார் பதவி விலகக்கோரி திமுக ஆர்ப்பாட்டம்: போலீசார் அனுமதி மறுப்பு 
போலீசார் அனுமதி மறுப்பு 

மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சர் பொறுப்பில் இருந்து சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. 

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் காலையிலேயே ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மேடை அமைப்பது, ஒலிபெறுக்கி வைப்பது என போராட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் அப்போது அங்கு வந்த காவல்துறையினர் திமுகவினரிடம் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும் ஏற்பாடுகளை நிறுத்தும்படி கூறியதாக தெரிகிறது. 

போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறியதால் இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது.  அனுமதியின்றி போராட முயன்றதாக கூறி 20 க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். போலீசாருக்கு எதிராக திமுகவினர் கண்டன முழக்ககளையும் எழுப்பினர். தொடர்ந்து அமைக்கப்பட்ட மேடை, ஸ்பீக்கர் அனைத்தும் அகற்றப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User