திமுக உட்கட்சி பூசல் விவகாரம் - சென்னை 153-வது வார்டு கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்

 திமுக பிரமுகர்களே மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Feb 16, 2024 - 06:34
Updated: 2 years ago
0 224
திமுக உட்கட்சி பூசல் விவகாரம் - சென்னை 153-வது வார்டு கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்

சென்னை போரூரில் திமுக உட்கட்சி பூசல் விவகாரத்தில் 153-வது வார்டு கவுன்சிலரின் கணவர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

சென்னை பெருநகர மாநகராட்சி வளசரவாக்கம் 11-வது மண்டலம் 153-அது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சாந்தி ராமலிங்கம். போரூரில் 153-வது வார்டு மாநகராட்சி டிவிசன்  அலுவலகம் உள்ள நிலையில் கவுன்சிலர் அமரக்கூடிய சீட்டில் கவுன்சிலரின் கணவர் ராமலிங்கம் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமாபுரம் 154-வது வார்டு திமுக சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலரின் கணவர்  ராமலிங்கம் அலுவலகத்தில் புகுந்து கவுன்சிலர் சீட்டில் உட்கார நீ யார் என கேட்டு, இருக்கையில் இருந்து எழுப்பி  தாக்குதல் நடத்தி உள்ளார்.

இந்த நிலையில் ரவியும், கவுன்சிலரின் கணவர் ராமலிங்கமும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். போரூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இரு தரப்பும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு  தரப்புக்கும் இடையே சண்டை எழ காரணம் எனவும் அதன் காரணமாக கவுன்சிலரின் அறைக்குள் புகுந்து கவுன்சிலரின் கணவரை திமுக பிரமுகரே தாக்கியது தெரியவந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  பிரமுகர்களே மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் ஏதும் பதிவாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் கட்சி தலைமை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் தரப்பிலேயே கோரிக்கையானது எழுந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User