"இதெல்லாம் ஒரு பொழப்பா அசிங்கமா இல்ல" விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய திமுக கவுன்சிலர் பிரபாகரன் கைது 

இண்டிகோ நிறுவன விமான பணிபெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூர் நகராட்சி கவுன்சில் பிரபாகரன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Mar 03, 2026 - 06:36
Updated: 5 months ago
0 420
"இதெல்லாம் ஒரு பொழப்பா அசிங்கமா இல்ல" விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய திமுக கவுன்சிலர் பிரபாகரன் கைது 
விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: திமுக கவுன்சிலர் பிரபாகரன் கைது 

திருவள்ளூர் நகராட்சியில் 6-வது வார்டு  திமுக கவுன்சிலராக இருப்பவர் பிரபாகரன். இவர் கடந்த 25-ம் தேதி தனது நண்பர் தியாகுவுடன் டெல்லி சென்றார். சென்னை விமானநிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் கவுன்சிலர் பிரபாகரன், தியாகு ஆகியோர் டெல்லி சென்றனர். 

அப்போது விமானத்தில் 25 வயது பணிப்பெண் பயணிகளுக்கு ஸ்நாக்ஸ்களை வழங்கி இருக்கிறார். அப்போது  மதுபோதையில் இருந்த கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு இருவரும் சேர்ந்து பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பணிப்பெண் கூச்சல் போட சகபயணிகள் கவுன்சிலர் பிரபாகரன், தியாகிவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவம்  குறித்து கடந்த 26 ஆம் தேதி அந்த விமான பணிப்பெண் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  2 பேர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன், தியாகு என்பது தெரிந்தது. 

பிரபாகரன் திருவள்ளூர் 6 வார்டு திமுக கவுன்சிலர் என்பதும் தியாகு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது.  இதையடுத்து 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும் படி போலீசார் உத்தரவிட்டனர். ஆனால் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.  இந்த நிலையில் நேற்று 2 பேரும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ்ல் வந்த போது பிரபாகரனையும் தியாகுவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User