அதிமுக கூட்டணியில் தேமுதிக? எஸ்.பி.வேலுமணியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு 

எஸ்.பி.வேலுமணியுடன், பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பால் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக  யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் நினைக்கின்றனர். 

Feb 16, 2026 - 05:20
0 406
அதிமுக கூட்டணியில் தேமுதிக? எஸ்.பி.வேலுமணியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு 
எஸ்.பி.வேலுமணியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு 

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக  கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. திமுகவுடன் தேமுதிக மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் திமுக கூட்டணிக்கு செல்லுமா? இல்லை மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

அதே நேரம்,  தேமுதிக சார்பில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிகவைப் பொறுத்தவரை, இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடம் உள்ளிட்டவற்றை பிரேமலதா விஜயகாந்த் எதிர்பார்ப்பதாக உள்ளது. என்டிஏ கூட்டணியில் மத்திய அமைச்சர் பதவியையும் தேமுதிக கேட்டு வருகிறது. 

இதனால், திமுக, அதிமுக கட்சிகள் தயக்கம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், இரு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என அக்கட்சி தொண்டர்கள் நீண்ட குழப்பத்தில் உள்ளனர். 

இந்த சூழலில், மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சட்டமன்ற தேர்தல் தொடர்பாக எஸ்.பி. வேலுமணி - பிரேமலதா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால்  தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாம் என அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User