22-வது முறையாக காவல் நீட்டிப்பு... நொந்து போன செந்தில் பாலாஜி டீம்... 

Feb 20, 2024 - 18:17
0 209
22-வது முறையாக காவல் நீட்டிப்பு... நொந்து போன செந்தில் பாலாஜி டீம்... 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறைபிடிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 22-வது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைதுச் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.  3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல், செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (20.02.2024) முடிவடைகிறது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால் சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் வழக்கை விசாரித்தார். பின்னர் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி D.V.ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User