Coolie: ரஜினியின் கூலி படத்தில் இணையும் LCU பிரபலம்... லோகேஷ் அடங்க மாட்டாரு போல!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தில், லோகேஷ் கனகராஜ்ஜின் LCU பிரபலம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jun 12, 2024 - 16:22
0 384
Coolie: ரஜினியின் கூலி படத்தில் இணையும் LCU பிரபலம்... லோகேஷ் அடங்க மாட்டாரு போல!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். வேட்டையனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த 10ம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இம்மாதம் இறுதி வரை ரஜினி பிஸியாக இருப்பதால், ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கூலி படத்தில் தானும் நடிக்கவுள்ளதாக சத்யராஜ் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அவர் மட்டுமின்றி ஸ்ருதிஹாசன், மலையாள நடிகர் திலீப் ஆகியோரும் கூலியில் கமிட்டாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய அபிஸியல் அப்டேட்ஸ் இன்னும் வெளியாகாத நிலையில், இன்னொரு மாஸ் ஹீரோவும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ஏஜெண்ட் அமர் கேரக்டரில் மிரட்டியிருந்தார் ஃபஹத் பாசில். அதனைத் தொடர்ந்து தமிழில் மாமன்னன் படத்தில் வில்லனாக கெத்து காட்டிய ஃபஹத், தற்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் கூலி படத்திலும் ஃபஹத் பாசிலை நடிக்க வைக்க லோகேஷ் பிளான் செய்துள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும், ஃபஹத் பாசிலும் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது. விக்ரம், வேட்டையன் படங்கள் மூலம் ஏற்கனவே லோகேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினி இருவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார் ஃபஹத். அதனால் கூலியிலும் ஃபஹத் பாசில் நடித்தால், இந்தப் படம் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆனாலும் இதுபற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகும் போது தான் உண்மை தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினியின் கூலி திரைப்படம் LCU ஜானரில் உருவாகவில்லை என லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறிவிட்டார். ஆனால், கூலி படத்தில் ஃபஹத் பாசில் நடிக்கவிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்க்க வைத்துள்ளது. கூலி படத்தில் LCU கனெக்ஷன் இருக்குமா அல்லது ஃபஹத் பாசிலின் கேரக்டரில் ஏதேனும் ட்விஸ்ட் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User