Chiyaan Vikram: கைவிட்ட சூர்யா… கால்ஷீட் கொடுத்த விக்ரம்… படப்பிடிப்புக்கு ரெடியான சுதா கொங்கரா

சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் உருவான புறநானூறு திரைப்படம் பாதியிலேயே ட்ராப் ஆனது. இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ள ஹீரோ யார் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

May 15, 2024 - 18:13
0 674
Chiyaan Vikram: கைவிட்ட சூர்யா… கால்ஷீட் கொடுத்த விக்ரம்… படப்பிடிப்புக்கு ரெடியான சுதா கொங்கரா

சென்னை: சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இயக்குநர் பிரிவில் தேசிய விருது வென்று அசத்தினார் சுதா கொங்கரா. அவருடன் சிறந்த நடிகர் விருதை சூர்யாவும், சிறந்த நடிகை விருது அபரணா பாலமுரளி, சிறந்த இசையமைப்பாளர் விருது ஜிவி பிரகாஷ் ஆகியோருக்கும் கிடைத்தன. இதுதவிர மேலும் சில பிரிவுகளிலும் தேசிய விருது வென்றது சூரரைப் போற்று. இதனால் சூர்யா – சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், அபிஸியலாக அறிவிப்பு வெளியானதுடன், சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம், விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சூர்யா – சுதா கொங்கரா இணையும் படத்தின் டைட்டில் புறநானூறு என அறிவித்த படக்குழு, ஷூட்டிங்கையும் தொடங்கியது. அதன்படி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புறநானூறு ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதேபோல், இந்தப் படம் 1960களில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் உருவாகவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆனதுடன், இந்திப் படங்களில் நடிக்கவும் ரெடியாகிவிட்டார். இதனால் புறநானூறு படத்தை ட்ராப் செய்தது படக்குழு. இதனையடுத்து சுதா கொங்கராவின் அடுத்தப் படம் என்ன, யார் ஹீரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், சுதா கொங்கராவின் அடுத்தப் படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துருவ் விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோரிடமும் கதை கூறியுள்ளாராம் சுதா. அந்த வரிசையில் சீயான் விக்ரமிடமும் ஒரு கதை சொல்ல, அவர் ஓக்கே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. விக்ரம் நடித்துள்ள தங்கலான் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டதால், அவர் தற்போது வீர தீர சூரன் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். இதன் தொடர்ச்சியாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி விரைவில் அபிஸியலாக அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User