மகளிருக்கு ஷாக் கொடுத்த முதல்வர் விஜய்: உரிமை தொகை ரூ.1000 நாளை இல்லை

நாளை மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் நாளை வரவு வைக்கப்பட மாட்டாது என முதல்வர் விஜய் அறிக்கையாக வெளியிட்டு மகளிருக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

May 14, 2026 - 07:13
0 950
மகளிருக்கு ஷாக் கொடுத்த முதல்வர் விஜய்: உரிமை தொகை ரூ.1000 நாளை இல்லை
உரிமை தொகை ரூ.1000 நாளை இல்லை

கடந்த திமுக ஆட்சியில் மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் 7-ம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதே நேரம் தவெக ஆட்சி அமைந்தால் ரூ.2,500 ஆக மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. 

இன்றைய தினம் தமிழ் புதல்வன் மற்றும் புதுமை பெண் திட்டத்தில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இதே போன்று மகளிர் உரிமை தொகையும் நாளை வரவு வைக்கப்படும் என தகவல்கள் பரவின. இந்த நிலையில் நிதி நிலைமை குறித்து தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் நிதிநிலை மிக மோசமாக உள்ளதாக நிதிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மகளிர் உரிமை தொகை நாளை வரவு வைக்கப்படாது என முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில்:மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்  உத்தரவு. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் . ச. ஜோசப் விஜய்  உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User