கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நேரில் ஆறுதல்..

Mar 31, 2024 - 11:23
0 161
கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நேரில் ஆறுதல்..

மறைந்த மதிமுக எம்.பி. கணேசமூர்த்தியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

மதிமுக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி கடந்த 28-ம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து உடல் அவல்பூந்துறை அருகே குமாரவலசில் உள்ள அவரது தோட்டத்திலேயே தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கணேசமூர்த்தியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User