"அயலான்" , "ஆலம்பனா" ஆகிய திரைப்படங்களை வெளியிட ஐகோர்ட் தடை

இரு படங்களையும் நான்கு வாரங்களுக்கு வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

Dec 15, 2023 - 13:16
Updated: 3 years ago
0 193
"அயலான்" ,  "ஆலம்பனா" ஆகிய திரைப்படங்களை வெளியிட  ஐகோர்ட் தடை

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள "அயலான்" மற்றும் நடிகர் வைபவ் நடித்துள்ள "ஆலம்பனா" ஆகிய திரைப்படங்களை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது.

இந்த கடன் தொகையை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு, 3 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியது. மீதத்தொகையை அயலான் அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும் அதன் வெளியீட்டுக்கு முன் திருப்பித்தருவதாக 2021ல் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்நிலையில், ஆண்டுக்கு 13 சதவீத வட்டியுடன் சேர்த்து 14 கோடியே 70 லட்சம் ரூபாயை திருப்பித்தராமல் நடிகர் வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தை  (டிசம்பர் 15ம் தேதி) , அயலான் படத்தை 2024 ஜனவரி 14ம் தேதியும் வெளியிட உள்ளதால், இரு படங்களையும் வெளியிட தடை விதிக்க கோரி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், இரு படங்களையும் நான்கு வாரங்களுக்கு வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User