இரண்டாவது முறையாக ஜாமின் மனு தள்ளுபடி..சிக்கலில் செந்தில் பாலாஜி..

Feb 28, 2024 - 13:03
Updated: 2 years ago
0 168
இரண்டாவது முறையாக ஜாமின் மனு தள்ளுபடி..சிக்கலில் செந்தில் பாலாஜி..

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். எட்டு மாதங்களாக சிறையில் உள்ள அவர், ஜாமின் கோரி மூன்று முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்ட போதும், மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை  உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் தாக்கல் செய்தார். 

இந்த மனு மீதான விசாரணை கடந்த 21-ம்தேதி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்ற நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்கள், முன்னுக்கு பின் முரண்பாடாக உள்ளதாகவும், வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்ததற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார். ஆகையால் நீண்ட காலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உண்மை என விளக்கினார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்தநிலையில் இன்று(28.02.2024) வழக்கு விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் வழக்கை 3 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் படிக்க :

https://kumudam.com/How-did-Dhruv-Jural-achieve-using-visualization-technique

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User