திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்... மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நம்பிக்கை...

Mar 22, 2024 - 19:57
0 189
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்... மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நம்பிக்கை...

திமுக அதிமுகவுக்கு மாற்றாக இந்த முறை தமிழ்நாட்டில் பாஜகவை அதிக இடங்களில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் தங்களது கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ள நிலையில்,  அக்கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று (மார்ச் 22) நடைபெற்றது. புரசைவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள  பாஜக தேர்தல் அலுவலகத்தை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர், "கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் பிரதமர் மிகுந்த அன்பு வைத்துள்ளார். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மாற்றாக மக்கள் நினைப்பது பாஜகவை மட்டுமே. ஊழலற்ற தெளிவான நேர்மையான ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும் என்பதால் இந்த முறை தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளில் மக்கள், பாஜகவை வெற்றி பெற வைத்து புதிய வரலாறு படைப்பார்கள்" என தெரிவித்தார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User