"உலக நாடுகள் ஸ்தம்பித்தது.. நாம் மட்டுமே தப்பினோம்" எப்படி? ஒரே காரணம் பிரதமர் மோடி ! - ஜேபி நட்டா பேச்சு!

பரப்புரை மேற்கொண்ட பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, திமுகவும் காங்கிரஸும் குடும்பக் கட்சி, ஊழல் கட்சி என கடுமையாக விமர்சித்து பேசினார். 

Apr 07, 2024 - 21:12
0 464
"உலக நாடுகள் ஸ்தம்பித்தது.. நாம் மட்டுமே தப்பினோம்" எப்படி? ஒரே காரணம் பிரதமர் மோடி ! - ஜேபி நட்டா பேச்சு!

விருதுநகர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருமங்கலத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்த பூமி சனாதன தர்மத்தை தாங்கி நிற்கும் பூமியாக உள்ளது என குறிப்பிட்டதுடன், பிரதமர் நரேந்திர மோடி தமிழராகவே வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால் திமுகவும், காங்கிரஸ் கட்சியினரும் தமிழக கலாசாரத்தை கலங்கடிக்கின்றனர் என்றார்.

அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய நாடுகளில் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மட்டுமே நீடித்தது. அதற்கு காரணம் பிரதமர் மோடியின் தலைமை பண்பு என ஜேபி நட்டா புகழாரம் சூட்டினார். 

இந்தியா கூட்டணி, குடும்பக் கட்சிகளும் ஊழல் கட்சிகளும் உள்ள கூட்டணி என விமர்சித்த ஜேபி நட்டா, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பா.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோர் பெயிலில் உள்ளார்கள் என்றும், அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா உள்ளிட்டோர் ஜெயிலில் உள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும், எதிர்க்கட்சிகளான திமுகவும் காங்கிரஸும் குடும்பக் கட்சி, ஊழல் கட்சி, அதிலும் திமுக கட்டப்பஞ்சாயத்து கட்சி என கடுமையாக சாடினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User