பாஜக வேட்பாளர் பட்டியல்...விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி..

Mar 22, 2024 - 14:51
Updated: 2 years ago
0 259
பாஜக வேட்பாளர் பட்டியல்...விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி..

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை நேற்று (21-03-2024) வெளியிட்ட பாஜக தலைமை, இன்று (22-03-2024) 15 வேட்பாளர்களை கொண்ட 2-ம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி விருதுநகரில் ராதிகா சரத்குமாரை பாஜக களமிறக்குகிறது. திருவள்ளூர் (தனி) தொகுதியில் பொன்.வி.பாலகணபதி, வடசென்னையில் பால் கனகராஜ், திருவண்ணாமலையில் அஸ்வதாமன் போட்டியிடுகின்றனர். நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சியில் கே.வசந்தராஜன் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். கரூரில் வி.வி.செந்தில்நாதன், சிதம்பரம் (தனி) தொகுதியில் கார்த்தியாயினி, நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் எஸ்.ஜி.எம்.ரமேஷ், தஞ்சையில் எம்.முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன் யாதவ், மதுரையில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், தென்காசி (தனி) தொகுதியில் பி.ஜான் பாண்டியன் ஆகியோர் பாஜக சார்பில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரி தொகுதியில் பாஜக சார்பில் நமச்சிவாயம் போட்டியிடுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User