AR Rahman: 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இணையும் AR ரஹ்மான்–பிரபுதேவா… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஏஆர் ரஹ்மான், பிரபுதேவா கூட்டணி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணையவுள்ளது. இதுபற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Mar 22, 2024 - 14:35
Updated: 2 years ago
0 267
AR Rahman: 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இணையும் AR ரஹ்மான்–பிரபுதேவா… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். தனுஷின் ராயன், கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப், இந்தியில் மைதான் என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த வரிசையில் தெலுங்கில் ராம் சரணின் ஆர்சி 16 படத்தில் கமிட்டாகியுள்ள ஏஆர் ரஹ்மான், அடுத்து பிரபுதேவாவுடனும் கூட்டணி வைத்துள்ளார். 90களில் செம்ம மாஸ் காட்டிய இந்த காம்போ இப்போது 2கே கிட்ஸுக்கும் வைப் கொடுக்க ரெடியாகிவிட்டது.  

காதலன், லவ் ஃபேர்ட்ஸ், மின்சார கனவு உட்பட 5 படங்களில் இதுவரை இணைந்துள்ள ஏஆர் ரஹ்மான், பிரபுதேவா கூட்டணி, மெலடி, வெஸ்டர்ன், குத்து சாங் என ஆல் ஏரியாவிலும் கலக்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இசைப் புயலும் நடனப் புயலும் கெத்தாக திரும்பி வருகின்றனர். இவர்களுடன் யோகி பாபு, அர்ஜுன் அசோகன், அஜு வர்கீஸ், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடிக்கவுள்ளனர். இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத இந்தப் படத்தை மனோஜ் NS இயக்கவுள்ளார்.  

இந்தப் படம் பற்றிய அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. அதில், காதலன் படத்தில் இடம்பெற்ற முக்காலா முக்காபுலா பாடலில் வரும் பிரபுதேவாவின் சிக்னேச்சர் ஸ்டெப் வைக்கப்பட்டுள்ளது. இது மியூசிக் ஜானர் மூவியா அல்லது காமெடி பின்னணியில் உருவாகவுள்ளதா என்பது தான் ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்தும் விரைவில் அப்டேட் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User