Atlee: அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் த்ரிஷா… அட்லீயின் அடுத்த சம்பவம் ரெடி… பரபரக்கும் டோலிவுட்

அட்லீயின் அடுத்த ஹீரோ அல்லு அர்ஜுன் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Apr 01, 2024 - 17:25
0 263
Atlee: அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் த்ரிஷா… அட்லீயின் அடுத்த சம்பவம் ரெடி… பரபரக்கும் டோலிவுட்

ஜவான் வெற்றிக்குப் பின்னர் அட்லீக்கு மாஸ் ஹீரோக்களிடம் இருந்து அழைப்புகள் சென்றன. கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான், தளபதி விஜய், உலகநாயகன் கமல்ஹாசன் என இவர்களில் ஒருவரின் படத்தை அட்லீ இயக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டோலிவுட் ஹீரோ அல்லு அர்ஜுனுடன் இணையவுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதற்கு அடுத்தப் படத்தில் அட்லீயுடன் இணைகிறாராம். அதன்படி அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அல்லு அர்ஜுனின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஜவானை தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், அல்லு அர்ஜுன் ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளாராம். பொன்னியின் செல்வன் குந்தவையாக ரசிகர்களின் மனதில் மீண்டும் சிம்மாசனமிட்டு அமர்ந்தார் த்ரிஷா. அதன்பின்னர் லியோவில் இன்னும் இளமையாக கிறங்கடிக்க, தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, கமல்ஹாசனின் தக் லைஃப், சிரஞ்சீவி ஜோடியாக ஒரு படம் என மீண்டும் பிஸியாகிவிட்டார். இந்த வரிசையில் தற்போது அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேர ரெடியாகிவிட்டார் த்ரிஷா. 

இதுபற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும், இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படமும் பான் இந்தியா மொழிகளில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User