சட்டமன்ற தேர்தல் டாஸ்மாக் தொடர் விடுமுறை: அலார்ட் ஆகி ரூ.400 கோடிக்கு  சரக்குகளை வாங்கிய மதுப்பிரியர்கள் 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மதுக்கடைகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக மதுப்பிரியர்கள் ரூ.400 கோடி அளவிற்கு சரக்குகளை வாங்கி புதிய சாதனை படைத்துள்ளனர். 

Apr 22, 2026 - 09:20
0 316
சட்டமன்ற தேர்தல் டாஸ்மாக் தொடர் விடுமுறை: அலார்ட் ஆகி ரூ.400 கோடிக்கு  சரக்குகளை வாங்கிய மதுப்பிரியர்கள் 
அலார்ட் ஆகி ரூ.400 கோடிக்கு  சரக்குகளை வாங்கிய மதுப்பிரியர்கள் 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப். 23) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகளின்படி ஏப்ரல் 21 முதல் 23 வரை மூன்று நாள்களுக்குத் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், விடுமுறை நாள்களுக்காக மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்க மதுப்பிரியர்கள் குவிந்ததால், கடைகள் அடைக்கப்படுவதற்கு முந்தைய தினமான நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

சாதாரண நாள்களில் தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை மது விற்பனை நடைபெறும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது விடுமுறைக்கு முன்னதாக ரூ.320 கோடிக்கு விற்பனை நடந்ததே சாதனையாக இருந்தது. ஆனால், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அதனை முறியடித்து, கூடுதலாக ரூ.80 கோடி வசூலாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் முழுவதும் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் நாளை வாக்களிக்கத் தயாராக உள்ளனர். இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்களை விடக் கூடுதலாக உள்ளது. நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இந்த வாக்குப்பதிவிற்காகத் தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், பாதுகாப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User