Aranmanai 4 Review: “பக்கா சம்மர் ட்ரீட்…” தமன்னா ஃபேன்ஸ் அலர்ட்… அரண்மனை 4 ட்விட்டர் விமர்சனம்!

சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

May 03, 2024 - 10:50
0 1.9
Aranmanai 4 Review: “பக்கா சம்மர் ட்ரீட்…” தமன்னா ஃபேன்ஸ் அலர்ட்… அரண்மனை 4 ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: சுந்தர் சி இயக்கிய அரண்மனை முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் அடுத்தடுத்து அரண்மனை 2, அரண்மனை 3 என மொத்தம் மூன்று பாகங்களை இயக்கினார் சுந்தர் சி. ஆனால் இந்த இரண்டு பாகங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றிப் பெறவில்லை. இதனையடுத்து அரண்மனை 4 வெளியான போது, “மீண்டும் மீண்டுமா” என சுந்தர் சி-யை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதேபோல், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், அவரும் கடைசி நேரத்தில் விலகினார்.

இந்த பரபரப்புகளையெல்லாம் கடந்து இன்று வெளியான அரண்மனை 4 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சுந்தர் சி உடன் தமன்னா, ரஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த முறை ஸ்க்ரிப்ட், விஷுவல், கிராபிக்ஸ், மேக்கிங், புரொடக்‌ஷன் வேல்யூ, காமெடி என எல்லா பக்கமும் சுந்தர் சி-யின் சிக்னேச்சர் ஒர்க்-அவுட் ஆகியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். முக்கியமாக க்ளைமேக்ஸுக்கு முந்தைய 40 நிமிட காமெடி போர்ஷன் தரம் என பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதேபோல், சிம்ரன் கேமியோவாக வந்து ஒரு பாட்டுக்கு செம்மையாக ஆட்டம் போட்டுள்ளதும் ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளது. தமன்னாவின் ஆக்டிங், அவரது அம்மா சென்டிமென்ட் இரண்டும் பெண்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும்பாலான ரசிகர்கள் அரண்மனை சீரிஸில் இந்த 4ம் பாகம் தான் அட்டகாசம் என பாராட்டியுள்ளனர். மேலும் சுந்தர் சி தனது வயதுக்கு ஏற்ற மாதிரி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளதாக கூறியுள்ளனர். 

இந்தாண்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான், ரஜினி கேமியோவாக நடித்த லால் சலாம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. ஆனாலும் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் எந்த தமிழ்ப் படங்களும் பெரிதாக சக்சஸ் செய்யவில்லை. இதற்கெல்லாம் சேர்த்து வைத்து அரண்மனை 4 ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த சம்மருக்கு தரமான காமெடி ட்ரீட்டாக அரண்மனை 4 வெளியாகியுள்ளது. 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User