"தேர்தலில் திமுகவுக்கு சாவுமணி அடிக்க வேண்டும்... திமுகவினரை ஓட ஓட விரட்ட வேண்டும்..." அப்சரா ரெட்டி காட்டம்

Apr 15, 2024 - 17:21
0 297
"தேர்தலில் திமுகவுக்கு சாவுமணி அடிக்க வேண்டும்... திமுகவினரை ஓட ஓட விரட்ட வேண்டும்..." அப்சரா ரெட்டி காட்டம்

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சாவுமணி அடிக்க வேண்டும் என அதிமுக பேச்சாளர் அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

வடசென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மீனாம்பாள் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராயபுரம் மனோ பேண்டு வாத்தியம் இசைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையடுத்து பிரசாரத்தில் பேசிய அப்சரா ரெட்டி, "இந்த மக்களவைத் தேர்தல் திமுகவுக்கு சாவுமணி அடிக்கும் தேர்தல். திமுக என்றாலே ஆபாசப் பேச்சு, அராஜகம், பெண்களுக்கு எதிரான கட்சி. அமைச்சர் துரைமுருகனிடம் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேட்டால் சில்லறையா மாற்றிக்கொண்டு இருக்கிறோம் என்கிறார். இப்படிப்பட்ட திமுகவினர் வாக்கு சேகரிக்க வந்தால் அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும்.

மிக்ஜாம் புயலில் தத்தளித்த வடசென்னை மக்களை முதலமைச்சர் ஸ்டாலினோ, அமைச்சர் உதயநிதியோ வந்து பார்த்தார்களா? எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு திமுக எம்.பி.க்கள் மூலம் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுப்பதை விட்டுவிட்டு ஒற்றைச் செங்கலை எடுத்துக்கொண்டு உதயநிதி ஊர் ஊராகச் சுற்றுகிறார். தமிழகத்தை போதைப்பொருள் மாநிலமாக மாற்றிய பெருமை திமுகவையே சாரும். தவறான அறுவை சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதியுதவி கூட அளிக்கப்படவில்லை" என குற்றம்சாட்டினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User