2024 நாடாளுமன்றத் தேர்தல் - அண்ணாமலை போட்டியா? அவரே சொன்ன பதில்!

நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, தற்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். 

Mar 01, 2024 - 17:57
0 199
2024 நாடாளுமன்றத் தேர்தல் - அண்ணாமலை போட்டியா?  அவரே சொன்ன பதில்!

மக்களவை தேர்தலையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள பா.ஜ.க. நாடாளுமன்ற தேர்தல் தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து  அவர் போட்டியிடுவார் என வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, இந்த தகவல் எங்கிருந்து யார் சொன்னார்கள் என தனக்கு தெரியவில்லை என்றும், பாஜக மேலிடம் பொறுப்பு கொடுத்து இருக்கிறார்கள் அதை செய்து கொண்டிருப்பதாகவும், இதில் தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு கிடையாது என்றும் அண்ணாமலை கூறினார்.  கட்சியே போட்டியிடு என சொன்னால், தான் நிச்சயமாக போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும்,  தொகுதியையும் மேலிடமே முடிவு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User