"அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் எனக்கு வாய்ப்பு" - பிரதமருக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை...

Mar 21, 2024 - 21:21
0 478
"அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் எனக்கு வாய்ப்பு" - பிரதமருக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை...

கோவையில் போட்டியிட வாய்ப்பளித்தற்காக பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தம் மீது நம்பிக்கை வைத்து கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளாக அவர் கூறியுள்ளார்.

தம் மீதும், மற்ற வேட்பாளர்கள் மீதும் வைத்த நம்பிக்கைக்காக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற தமிழக பாஜக சிறப்பான பங்களிப்பை வழங்கும் என அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User