Ajith: அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல கிரிக்கெட் வீரர்… போட்டோஸ்ல அத கவனிச்சீங்களா..?

விடாமுயற்சி, குட் பேட் அக்லி என பிஸியாக இருக்கும் அஜித்துடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Apr 04, 2024 - 10:54
0 239
Ajith: அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல கிரிக்கெட் வீரர்… போட்டோஸ்ல அத கவனிச்சீங்களா..?

சென்னை: சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் நிஜத்தில் அஜித் அனைவருக்குமான மனிதராக வலம் வருகிறார். எந்த சப்போர்ட்டும் இல்லாமல் திரையுலகில் திமிறி எழுந்த ஆசை நாயகனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பல பிரபலங்களுக்கும் அஜித் ஒரு மாய பிம்பம் தான். சினிமா மட்டுமின்றி பல துறைகளில் வெற்றிப் பெற்ற பலரும் அஜித்தை சந்திக்கவும் அவரது நட்பு வட்டத்தில் இடம் பிடிக்கவும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல் அஜித்தும் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களையும் பிரபலங்களையும் நேரில் அழைத்து பாராட்டுவது வழக்கம்.  

இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் அஜித்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நட்டு என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடராஜன் ஐபிஎல் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் என்ட்ரியானார். வேகப்பந்து வீச்சாளரான நட்டு தனது யார்க்கர்களால் பேட்டர்களை கலங்கடித்தார். சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தில் இருந்து சர்வதேச அளவில் மாஸ் காட்டிய நடராஜனின் பயோபிக் சினிமாவாக உருவாகவுள்ளது. அதில் சிவகார்த்திகேயன் தான் நடராஜன் கேரக்டரில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன், இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து நடராஜனுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், அவரோ அஜித்துடன் கேக் வெட்டி செலிப்ரேட் செய்துள்ளார். அதில் அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டி விட, பதிலுக்கு அஜித்தும் நட்டுவுக்கு கேக் ஊட்டி விடுகிறார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அஜித், நடராஜனுடன் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட பிரபலங்களும் உள்ளனர். முக்கியமாக அஜித்தும் நடராஜனும் வெள்ளை நிற ஷார்ட், டி-ஷர்ட் அணிந்துள்ளதும் ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User