Ajith: திடீரென அப்போலோவில் அட்மிட்டான அஜித்… பதறிய ரசிகர்கள்… வெளியானது உண்மையான காரணம்!

கோலிவுட்டின் முன்னணி நடிகரான அஜித் திடீரென அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இதுபற்றி அஜித் தரப்பில் இருந்து தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Mar 07, 2024 - 13:11
0 277
Ajith: திடீரென அப்போலோவில் அட்மிட்டான அஜித்… பதறிய ரசிகர்கள்… வெளியானது உண்மையான காரணம்!

மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அஜித் திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஜித்துக்கு என்ன பிரச்சினை என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.  

இதனையடுத்து அஜித் தரப்பில் இருந்து இதுபற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான உடல் பரிசோதனைக்காக தான் அஜித் அப்போலோ சென்றுள்ளதாகவும், அவருக்கு பெரியளவில் பாதிப்பு ஏதும் இல்லை எனவும் தற்போது தெரியவந்துள்ளது. நேற்று மாலை அப்போலோ சென்ற அஜித், விரைவில் வீடு திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சில மாதங்களுக்கு முன்பு விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருந்த அஜித், மருத்துவ பரிசோதனைக்காக துபாய் சென்றதாக செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியாமல் ஏமாற்றத்தில் உள்ள ரசிகர்களுக்கு, அஜித் மருத்துவமனையில் அட்மிட் ஆனது பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது. அதேநேரம் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக மார்ச் 15ம் தேதி அஜித் வெளிநாடு செல்லவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User