Ajith: “என்ன சமையலோ..?” மீண்டும் கிச்சன் கிங்காக மாறிய அஜித்… ட்ரெண்டாகும் சம்மர் க்ளிக்ஸ்!

கடந்த வாரம் எளிமையாக சென்று வாக்களித்து கவனம் ஈர்த்தார் அஜித். தற்போது அவரது லேட்டஸ்ட் க்ளிக்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Apr 23, 2024 - 17:55
0 343
Ajith: “என்ன சமையலோ..?” மீண்டும் கிச்சன் கிங்காக மாறிய அஜித்… ட்ரெண்டாகும் சம்மர் க்ளிக்ஸ்!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. தேர்தல் காரணமாக படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டதால் சென்னை வந்திருந்தார் அஜித். அதேபோல் தேர்தல் நாளில் முதல் ஆளாக வாக்குச் சாவடிக்குச் சென்ற ஏகே, காத்திருந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அப்போது அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டதால், அப்பகுதியே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.  

தேர்தல் முடிந்ததை அடுத்து அஜித் விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ சம்மர் விடுமுறையை கொண்டாடி வருவதாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன்னர் தனது சகாக்களுடன் பைக் ட்ரிப் சென்ற அஜித், அங்கு பிரியாணி சமைத்து அனைவருக்கும் விருது கொடுத்து அசத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.  

தற்போது அஜித் மீண்டும் கிச்சன் கிங்காக மாறியது அவரது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. தனது நண்பர்களுக்காக சமையல் செய்யும் அஜித், அதன்பின்னர் அவர்களுடன் அமர்ந்து ஒன்றாக சாப்பிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதேபோல் அஜித் கேஷுவலாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது. இந்த போட்டோஸ் ட்ரெண்ட் ஆனாலும் விடாமுயற்சி அப்டேட் எப்போது வரும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.  

மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால், அன்று விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக மங்காத்தா திரைப்படம் மே 1ல் ரீ-ரிலீஸாகும் என்ற தகவல்களால் அஜித் ரசிகர்கள் இப்போதே வெறித்தனம் செய்ய கத்திருக்கின்றனர். கடந்த வாரம் ரீ-ரிலீஸான விஜய்யின் கில்லி திரைப்படம் இதுவரை 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை மங்காத்தா ரீ-ரிலீஸானால் கில்லி சாதனையை அது முறியடிக்கும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User