Ajith: அஜித் மகள் அனோஷ்காவா இது... ஹீரோயின் லுக்கில் செம்ம க்யூட்!

அஜித் மகள் அனோஷ்கா அவரது தோழியுடன் ஷாப்பிங் சென்ற வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Jun 05, 2024 - 16:27
0 1.2
Ajith: அஜித் மகள் அனோஷ்காவா இது... ஹீரோயின் லுக்கில் செம்ம க்யூட்!

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் கடைசிக் கட்ட படப்பிடிப்பு, ஜூன் 20ம் தேதி அஜர்பைஜானில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பிலும் பிஸியாக காணப்படுகிறார் அஜித்.

அஜித் மகளின் வைரல் வீடியோ
முன்பெல்லாம் மீடியா வெளிச்சம் இல்லாமல் ஒதுங்கி போன அஜித், கடந்த சில மாதங்களாக செல்லும் இடமெல்லாம் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொளவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல், அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகின்றன. ஆத்விக் ஃபுட்பால் விளையாடும் வீடியோஸ் அதிகளவில் ட்ரெண்டாகி வந்த நிலையில், அஜித்தின் மகள் அனோஷ்காவின் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. 

அனோஷ்கா கொடுத்த க்யூட் ரியாக்ஷன்
சென்னையில் தனது தோழியுடன் ஷாப்பிங் சென்றுள்ளார் அனோஷ்கா. அப்போது ரசிகர் ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்த அனோஷ்கா, க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்ததுடன், அங்கிருந்து கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார். அனோஷ்காவின் இந்த வீடியோவை வைரலாக்கிய நெட்டிசன்கள், அஜித் வீட்டில் இருந்து ஹீரோவுக்கு முன்பே ஒரு ஹீரோயின் ரெடி என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். குழந்தைகளின் விருப்பங்களுக்கு தடை போடாதவர் அஜித். ஆத்விக் ஃபுட்பாலில் கலக்கி வரும் நிலையில், அனோஷ்கா சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டால், அதற்கு அஜித் கண்டிப்பாக க்ரீன் சிக்னல் கொடுப்பார் என்றே கூறி வருகின்றனர். 

சஞ்சய் படத்தில் அனோஷ்கா நாயகி?
விஜய் மகன் சஞ்சய் இயக்குநராக சினிமாவில் அறிமுகமாகவுள்ள நிலையில், அந்தப் படத்தில் அனோஷ்கா ஹீரோயினாக நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்கின்றனர். விஜய் – ஷாலினி கூட்டணியில் வெளியான காதலுக்கு மரியாதை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்தது. அப்போது விஜய், ஷாலினி ஜோடி ரியல் லைஃபிலும் இணைய வேண்டும் என 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால், ஷாலினியோ அஜித்திடம் சரண் அடைந்தார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User