Aishwarya Rajesh: தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி... இப்ப கன்னடத்திலும் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார்.

Apr 23, 2024 - 14:34
0 380
Aishwarya Rajesh: தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி... இப்ப கன்னடத்திலும் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: காக்கா முட்டை, வட சென்னை, கனா, க.பெ. ரணசிங்கம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு கட்டத்தில் மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் டியர் படம் வந்தது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளை தொடர்ந்து உத்தரகண்டா என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் முதன்முறையாக கன்னட திரையுலகில் அறிமுகம் ஆகிறார்.  

கேஆர்ஜி ஸ்டுடியோஸ் தயாரிக்க, ரோகித் இயக்கும் இந்தப் படத்தில் பிரபல கன்னட ஹீரோ தனஞ்சயா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். உத்தரகாண்டா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பிஜப்பூர் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி கன்னட ஹீரோவான சிவராஜ்குமார் இன்னொரு ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பாவனா நடிப்பதாக சொல்லப்படுகிறது. பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான அமித் திரிவேதி இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.      

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User