நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே காலமானார்..!  அதிர்ச்சியில் ரசிகர்கள்..! காரணம் இதுதானாம்.

Feb 02, 2024 - 12:48
Updated: 2 years ago
0 359
நடிகையும் மாடலுமான  பூனம் பாண்டே காலமானார்..!  அதிர்ச்சியில் ரசிகர்கள்..! காரணம் இதுதானாம்.

பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே கர்பப்பை புற்றுநோயால் உயிரிழந்த செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே இன்று காலை  கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 32.  பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக  வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் சில் பாலிவுட் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் மாடல் அழகியாகவும்  ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு  தனி இடத்தையும் தக்க வைத்துக்கொண்டவர். சில படங்களில் கவர்ச்சி நடனனும் ஆடியுள்ளார்.

தனக்கென ஒரு தனி இனையதளத்தை உருவாக்கி அதில் அதிகம் ஆபாச படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டார். அடிக்கடி சில விவகாரமான பதிவுகளை பதிவிட்டு சமூக வலைதள வட்டாரத்தில் பெரும் பரபரப்பான பிரபலமாகவே தன்னை வைத்துக்கொண்டார்.

இன்னிலையில் இவர் நேற்று கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  மேலும் பூனம் பாண்டேவின் மேலாளரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.  

இன்ஸ்டாகிராமில் வெளியான அறிக்கையில், "இன்று எங்களுக்கு ஒரு கடினமான நாள். கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் எங்கள் அன்பான பூனம் பாண்டேவை இழந்துவிட்டோம். இந்த துக்க செய்தியை உங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். பூனம் பாண்டே அனைவரையும் அன்புடன் நேசித்தார்.  இந்த சமயத்தில் அவரை நினைத்து வாடும் எங்களுக்கு சிறிது தனிமை தேவைப்படுகிறது " என்று பதிவிடப்பட்டு உள்ளது.  

இணைய வாசிகளின் மனம் கவர்ந்த பூனம் பாண்டேவின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க  |  கமல்ஹாசனின் ‘அந்த’ 2 நிபந்தனைகளுக்கு உட்பட்டதா.. திமுக?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User