அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி

Feb 14, 2024 - 18:25
Updated: 2 years ago
0 227
அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

தொடக்க காலகட்டத்தில் இருந்தே நடிகை கவுதமி பாஜகவில் இணைந்திருந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தின் முன்னேற்றம் தொடர வேண்டுமானால், அதிமுக ஆட்சி முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடர வேண்டும் என்றும் தமிழகத்தில் முன்னேற்றம் தொடர அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் நடிகை கவுதமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். 

இதனையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்தார். இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User