“அரசியல் கேள்வி வேண்டாம்” - சசிகலா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்

Feb 25, 2024 - 14:11
0 233
“அரசியல் கேள்வி வேண்டாம்” - சசிகலா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்

சென்னை போயஸ் கார்டனில் நடைபெற்ற ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் புதுமனை புகுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே, வி.கே.சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதற்கு ஜெயலலிதா இல்லம் என்று பெயரிட்டுள்ள அவர், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி புதுமனை புகுவிழா நடத்தினார். அதில், சசிகலா ஆதரவாளர்கள் பலர் பங்கேற்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டார்.

சசிகலாவுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், சசிகலாவின் புதிய வீடு கோயில் போல் இருக்கிறது என்றார். இந்த வீடு அவருக்கு பெயர், புகழ், சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்த ரஜினி, அரசியல் தொடர்பான கேள்விகளை தம்மிடம் கேட்க வேண்டாமென கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User