AR Murugadoss: சிவகார்த்திகேயனை தொடர்ந்து சல்மான் கான்… பாலிவுட்டில் ரீ-என்ட்ரியாகும் AR முருகதாஸ்

சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் ரீ-என்ட்ரியாகும் ஏஆர் முருகதாஸ், முதன்முறையாக சல்மான் கானுடன் இணையவுள்ளார்.

Mar 12, 2024 - 12:27
0 211
AR Murugadoss: சிவகார்த்திகேயனை தொடர்ந்து சல்மான் கான்… பாலிவுட்டில் ரீ-என்ட்ரியாகும் AR முருகதாஸ்

அஜித்தின் தீனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் இயக்குநர் என பெயர் வாங்கிய ஏஆர் முருகதாஸ், அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து மாஸ் காட்டினார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் தோல்வியடைய, அடுத்து விஜய்யை இயக்கவிருந்த ஏஆர் முருகதாஸ் அதிலிருந்தும் விலகினார். அதன்பின்னர் ஏஆர் முருகதாஸ் எந்த படமும் இயக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் தான் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தில் கமிட்டானார்.  

பிரம்மாண்டமாக உருவாகவுள்ள எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. அதேநேரம் எஸ்கே 23 டைட்டில், ரிலீஸ் தேதி போன்ற அப்டேட்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஏஆர் முருகதாஸ். அமீர்கான் நடிப்பில் கஜினி ரீமேக் மூலம் இந்தியில் அறிமுகமான ஏஆர் முருகதாஸ், பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கெத்து காட்டினார். அதன் பின்னர் இந்தியில் கடைசியாக அருள்நிதியின் மெளன குரு படத்தின் இந்தி ரீமேக்கான அகிராவை இயக்கியிருந்தார்.

 

இதன் தொடர்ச்சியாக தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுடன் இணைகிறார் ஏஆர் முருகதாஸ். சஜித் நதியத்வாலா தயாரிக்கும் இந்தப் படம் 2025 ரம்ஜானுக்கு ரிலீஸாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சல்மான் கான், ஏஆர் முருகதாஸ், சஜித் நதியத்வாலா ஆகியோர் தங்களது டிவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளனர். இதனால் ஏஆர் முருகதாஸ், சல்மான் கான் என்ற ஹேஷ்டேட் ட்ரெண்டாகி வருகிறது. சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் ஏஆர் முருகதாஸ் இணைந்துள்ளது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User