செயல் வீரர்கள் கூட்டம் என்ற பெயரில் குத்தாட்டம்: 16 ஆயிரம் வாக்குசாவடி, 1,100 ஒன்றியம், 5,200 கிளை கழகங்களில் ஆளில்லை, தடுமாறும் தமிழக வெற்றிக் கழகம்

16 ஆயிரம் வாக்குசாவடியில் ஆளில்லை, 1,100 ஒன்றியம், 5,200 கிளை கழகங்களில் நிர்வாகிகள் இல்லை. இந்த நிலையில் நேற்று நடந்த செயல்வீரர்கள் கூட்டம். தேர்தல் குறித்து ஆலோசிக்காமல் ஆட்டம், பாட்டம், குத்தாட்டத்தோடு நடந்து முடிந்து இருக்கிறது.

Mar 02, 2026 - 03:00
0 432
செயல் வீரர்கள் கூட்டம் என்ற பெயரில் குத்தாட்டம்: 16 ஆயிரம் வாக்குசாவடி, 1,100 ஒன்றியம், 5,200 கிளை கழகங்களில் ஆளில்லை, தடுமாறும் தமிழக வெற்றிக் கழகம்
தடுமாறும் தமிழக வெற்றிக் கழகம்

மார்ச் 1-ம் தேதி 234 தொகுதிகளுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்து இருந்தார். இந்தக் கூட்டத்தில், தேர்தல் பிரசாரப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் ஏற்கெனவே அறிவித்ததுபோல, கலந்தாலோசிக்கப்படும் என்றும், 

தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும்

அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடந்தன. பொதுச்செயலர் ஆனந்த், சென்னை தி.நகர் தொகுதியிலும், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட தொகுதிகளிலும் பங்கேற்றனர். தலைமை கழக நிர்வாகிகள், துவக்க உரையாற்றிவிட்டு சென்ற பின், விஜய் பட பாடல்களை இசைக்க விட்டு, குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். இதன் பின்னர் தேர்தல் பணி குறித்து இந்த கூட்டத்தில் எதுவும் ஆலோசிக்காமல் கலைந்து சென்றனர். பெரும்பாலான தொகுதிகளில் இதே நிலை தான் காணப்பட்டது.  தேர்தலுக்காக எந்தவித ஆலோசனையும் நடத்தாததால், பெரும்பாலான மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம் பிசுபிசுத்து விட்டது.

சென்னை துறைமுகம், சைதாப்பேட்டை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு மாவட்டச் செயலர் நியமிக்கப்படவில்லை. அதோடு, 1,100 ஒன்றியங்களுக்கும், 5,200 கிளை கழகங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கவில்லை. 16,000 ஓட்டுச்சாவடிகளில், 'பூத் கமிட்டி' அமைக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினால் எப்படி என தவெக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். இதே நிலை சென்றால் தவெக தேர்தல் சந்திப்பது மிகவும் கடினமாக இருக்கும் என தவெக நிர்வாகிகள் புலம்பி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User