மது குடிக்காதீங்கனு சொன்னது குத்தமா? அட்வைஸ் செய்த நபரை கொலை செய்த கொடூரம்..!

Mar 08, 2024 - 21:04
0 372
மது குடிக்காதீங்கனு சொன்னது குத்தமா? அட்வைஸ் செய்த நபரை கொலை செய்த கொடூரம்..!

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த நபரை முன் விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 47 வயதாகும் சக்திவேல்,  கடந்த பத்து நாட்களுக்கு முன்னர், தன் வீட்டுக்கு அருகே மது குடித்து கொண்டிருந்த நபர்களை தட்டி கேட்டுள்ளார். சக்திவேலின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் சக்திவேலை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, கடந்த 3 ஆம் தேதி அன்று வழக்கம்போல டிம்ப்லர்ஸ் ரோட்டில் உள்ள டீக்கடைக்கு சென்ற சக்திவேலை, குடிபோதையில் வந்த அதே கும்பல் சரமாரியாக வெட்டி தப்பித்து ஓடிச் சென்றனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேலை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக பேசின் பிரிட்ஜ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்திவேல் நேற்று (மார்ச் 07) மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் ‘குடி’மகன்களான புளியந்தோப்பு பார்த்தசாரதி பகுதியை சேர்ந்த அஜித் குமார்  (வயது 21), கேபி பார்க் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (வயது 24), சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த விக்கி (வயது 22) உட்பட நான்கு பேரையும்  கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது தான், முன் விரோதம் காரணமாக சக்திவேல் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் தெரியவந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User