பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி... கருகி பலியான காதலன்... கொலை வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் பாலக்கரை அருகே காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொன்ற காதலி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

May 14, 2024 - 20:05
0 1.3
பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி... கருகி பலியான காதலன்... கொலை வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸ்

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆகாஷ். பூம்புகார் கல்லூரியில் பி.காம் படித்து வரும் இவர், மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் படித்து வரும் சிந்துஜா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் 2 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இன்றி காதலித்து வந்துள்ளனர். ஆனால்,  ஆகாஷ் காதலிக்கு தெரியாமல், இன்னொரு பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது தெரிந்ததும் கொதித்துப்போன சிந்துஜா, ஆகாஷை பலமுறை கண்டித்துள்ளார். 

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில், ஆகாஷும் சிந்துஜாவும் மயிலாடுதுறை கடற்கரைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர். அப்போது, ஆகாஷிடம் மற்றொரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பு குறித்து கேட்டு கண்டித்துள்ளார் சிந்துஜா. அப்போது தனக்கு எந்த பெண்ணுடனும் தொடர்பு இல்லை எனக்கூறியதால், ஆத்திரமடைந்த சிந்துஜா, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை காதலன் ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். 

இருசக்கர வாகனத்தில் எரிந்தபடியே வந்த இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆகாஷுக்கு 60 சதவீத தீக்காயமும், சிந்துஜாவுக்கு 40 சதவீத தீக்காயமும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக சிந்துஜா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், காதலன் ஆகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக போலீசார், சிந்துஜா மீதான வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்ணின் சந்தேகம் ஒரு உயிரை பலி வாங்கியதோடு சிறைக்கும் அனுப்பி வைத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 2
Angry Angry 0

Comments (0)

User