காதலிக்கு பிரசவம் பார்த்த கொடூர காதலன்.. சிசுவின் 2 கால்களையும் வெட்டி கொன்ற பயங்கரம்.. சென்னையில் அதிர்ச்சி

May 01, 2024 - 17:33
Updated: 2 years ago
0 407
காதலிக்கு பிரசவம் பார்த்த கொடூர காதலன்.. சிசுவின் 2 கால்களையும் வெட்டி கொன்ற பயங்கரம்.. சென்னையில் அதிர்ச்சி

சென்னை தியாகராய நகரில் வீட்டிலேயே 7 மாத காதலிக்கு பிரசவம் பார்த்து, சிசுவின் 2 கால்களையும், வெட்டி எடுத்துக் கொன்றது தொடர்பாக காதலன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா(24). இவர் தியாகராயநகர் சவுத்போக் ரோட்டில் வசித்து வருகிறார். கடந்த ஓராண்டு காலமாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  செவிலியராக பணியாற்றி வருகிறார்.  சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி (29) என்பவருடன் வினிஷாவிற்கு காதல் மலர்ந்தது.  

அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனால் வினிஷா கர்ப்பமானார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த வினிஷாவுக்கு நேற்று (ஏப்ரல் 30) திடீரென அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டது. திருமணம் செய்யாமல் வினிஷா கர்ப்பமாகி இருப்பதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் விடுதியில் வைத்து செல்வமணி பிரசவம் பார்த்துள்ளார். 

அப்போது குழந்தையின் இரு கால்களையும் செல்வமணி வெட்டி எடுத்து பிரசவம் பாரத்ததால் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
இறந்த குழந்தையின் ஒரு காலை கழிப்பறையில் போட்டுவிட்டு மற்ற பாகங்களை பக்கெட்டுக்குள் செல்வமணி மறைத்து வைத்துள்ளார். இதற்கிடையே வினிஷாவின் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டதால் தியாகராயநகர் சவுத் போக் சாலையில் உள்ள மருத்துவமனையில் செல்வமணி சேர்த்துள்ளார். 

தொடர்ந்து உள்நோயாளியாக மருத்துவமனையில் வினிஷா சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனையில் இருந்து அளித்த தகவலின் படி,  தியாகராயநகர் போலீசார் விசாரணை நடத்தினர். செல்வமணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள செல்வமணியை தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட நர்ஸ் வினிஷாவிடம் சிகிச்சை முடிந்த பின் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User