2026ம் ஆண்டில் காலியாக போகும் 75 ராஜ்யசபா எம்பி பதவிகள்

2026ம் ஆண்டு உ.பி. பீகார், தமிழ்நாடு  என பல மாநிலங்களில் 75 ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாக உள்ளன. 

Dec 23, 2025 - 11:32
0 491
2026ம் ஆண்டில் காலியாக போகும் 75 ராஜ்யசபா எம்பி பதவிகள்
75 Rajya Sabha MP seats

சட்டமன்ற எம்எல்ஏக்கள் வாக்களித்து ராஜ்யசபா எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த எம்பிக்களின் பதவிகாலம் 6 ஆண்டுகள் ஆகும். அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பத்து இடங்களும், பீகாரில் ஐந்து இடங்களும் மகாராஷ்டிராவில் 7 ராஜ்யசபா இடங்களும் காலியாக உள்ளன.

மேலும், மத்தியப் பிரதேசம், அசாம், அருணாச்சல், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், உத்தரகாண்ட், இமாச்சல், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களிலும் ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன.

2026ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் மூத்த தலைவர்களில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, திக்விஜய சிங், சரத் பவார், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, பி.எல்.வர்மா, ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் ஜார்ஜ் குரியன் ஆகியோர் அடங்குவர். 

தமிழகத்தில் ஜிகே வாசன், தம்பித்துரை, திருச்சி சிவா உள்ளிட்டோர் பதவிகாலமும் முடிவடைய உள்ளது. இவர்கள், மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவார்களா அல்லது புதியவர்களால் மாற்றப்படுவார்களா என்பது தேர்தல் நேரத்தின்போதே தெரிய வரும். 

தற்போது மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி 129 இடங்களையும் இண்டியா  கூட்டணி 78 இடங்களையும் கொண்டுள்ளன. இந்த இடங்களை வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களும் நிர்ணயம் செய்யும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User