6 ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் ஒவர்: சீட்டுக்கு துண்டு போடும் கூட்டணி கட்சிகள்

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. 6 ராஜ்யசபா எம்பி பதவி காலியானதால், தங்களுக்கு அந்த பதவி தர வேண்டும் என திமுக, அதிமுகவிடம் கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளன. 

Feb 18, 2026 - 06:33
0 419
6 ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் ஒவர்: சீட்டுக்கு துண்டு போடும் கூட்டணி கட்சிகள்
6 ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் ஒவர்

நாட்டில் தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வருகிற மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாகின்றன.

அதன்படி, திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை பாதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து அன்று மாலையே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் களைகட்டும் நிலையில் மாநிலங்களவை தேர்தலும் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ராஜ்யசபா சீட் வேண்டும் என திமுக, அதிமுகவை கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் திமுக, அதிமுக கட்சிகள்  ராஜ்யசபா சீட்டை உறுதி செய்வதில் கட்சிகள் கவனம் செலுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User