"33 YEARS OF CHINNATHAMBI…வாழ்வை மாற்றிய திரைப்படம்" – குஷ்பு நெகிழ்ச்சி பதிவு..!

சின்னதம்பி திரைப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நடிகை குஷ்பு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்… 

Apr 12, 2024 - 20:19
0 506
"33 YEARS OF CHINNATHAMBI…வாழ்வை மாற்றிய திரைப்படம்" – குஷ்பு நெகிழ்ச்சி பதிவு..!

சின்னதம்பி திரைப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நடிகை குஷ்பு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்… 

பி வாசு இயக்கத்தில், பிரபு – குஷ்பு நடித்த சின்னத்தம்பி திரைப்படம் வெளியான நேரத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பிரபு மற்றும் குஷ்பு இருவர் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் இது. இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. காது குத்து தொடங்கி கல்யாண மேடை வரை இந்த பாடல்கள் இடம்பெறாத மேடைகளே இல்லை.

சின்னத்தம்பி பிரபு, சின்னத்தம்பி குஷ்பு என்று மக்கள் அழைக்கும் அளவிற்கு அவர்களுக்கான ஒரு அடையாளத்தை கொடுத்தது இந்த திரைப்படம். சொல்லப்போனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டால் நன்றாக இருக்குமென்றெல்லாம் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு அத்தனை வரவேற்பு அளித்தனர். 

இந்நிலையில், தற்போது இத்திரைப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து,  தன் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த சின்னத்தம்பி படம் குறித்து பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பு. 

https://twitter.com/khushsundar/status/1778639833977798876?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "காலம் கடந்துவிடும் என்பார்கள். ஆனால் அதுதான் உண்மை. என்னால் நம்ப முடியவில்லை, சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகியுள்ளது. இத்திரைப்படம் எங்கள் வாழ்க்கையை மாற்றியது. என்மீது பொழியப்பட்ட அன்பு, பாசம் இன்றளவும் தொடர்ந்துக் கொண்டே இருப்பதை நினைத்துக்கூட பார்க்க  முடியவில்லை. உங்கள் எல்லோருக்கும் நாங்கள் என்றும் நன்றிக்கடனாக இருப்போம். என் மனமார்ந்த நன்றி.  


எனக்கு பிடித்த இயக்குநர் பி.வாசு சார் மற்றும் நடிகர் பிரபு சார், என்றும் என் வாழ்க்கையில் ஸ்பெஷலானவர்கள்..  இறுதியாக இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் பாடல்கள் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப் படைக்கும்" என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User