எல்லை தாண்டியதாக கைது.. தமிழக மீனவர்கள் 32 பேருக்கு காவல்..

Mar 21, 2024 - 20:41
0 179
எல்லை தாண்டியதாக கைது.. தமிழக மீனவர்கள் 32 பேருக்கு காவல்..

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 32 பேரையும் ஏப்ரல் 4-ம் தேதி வரை சிறையிலடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த 25 பேர் 3 விசைப் படகுகளில் நெடுந்தீவு அருகே இன்று (மார்ச் 21)  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக கூறி அனைவரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. இதேபோல் மன்னார் கடற்பகுதியில் 2 விசைப் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேரையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய இலங்கை கடற்படையினர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது 25 பேரையும் ஏப்ரல் 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 மீனவர்களை வரும் 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஆணையிட்டார்.

ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 32 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை மத்திய, மாநில அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User