ஒரு நிமிடத்தில் மாயமான 300 கிலோ சாக்லேட் மாலை... அக்கு அக்காக பிய்த்து சாப்பிட்ட திமுக நிர்வாகிகள்...

Apr 12, 2024 - 16:25
0 210
ஒரு நிமிடத்தில் மாயமான 300 கிலோ சாக்லேட் மாலை... அக்கு அக்காக பிய்த்து சாப்பிட்ட திமுக நிர்வாகிகள்...

காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வத்துக்கு ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் அவர்கள் கிரேன் மூலம் 300 கிலோ சாக்லேட் மாலையை அணிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் நெடுங்குன்றம் ஊராட்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது நெடுங்குன்றம் ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் தலைமையில் 300 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலையை வேட்பாளர் செல்வத்திற்கு கிரேன் மூலம் போடப்பட்டது. 

அமைச்சர் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கும் போதே வேட்பாளருக்கு அணிவித்த சாக்லேட் மாலையில் இருந்த சாக்லேட்டுகளை, அங்கிருந்த திமுக நிர்வாகிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருமே பறித்து சென்ற சம்பவமும் அரங்கேறியது. 

இதில் பாதி சாக்லேட்டுகள் கீழே விழுந்த போது அதையும் பலர் எடுத்து சென்றனர். ஒரு நிமிடத்தில் 300 கிலோ சாக்லேட் மாலையை காலி செய்த திமுக நிர்வாகிகளால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User