2024 Diwali Release: விடாமுயற்சி, கங்குவா, விடுதலை 2... தீபாவளி ரேஸில் தெறிக்கவிடப் போகும் ஹீரோஸ்!

இந்தாண்டு தீபாவளி ரேஸில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் போட்டிப் போட காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 08, 2024 - 17:44
0 550
2024 Diwali Release: விடாமுயற்சி, கங்குவா, விடுதலை 2... தீபாவளி ரேஸில் தெறிக்கவிடப் போகும் ஹீரோஸ்!

சென்னை: ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோரின் படங்கள் இந்தாண்டு ரிலீஸாகின்றன. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்கள் ஒரே ஆண்டில் ரிலீஸாகவிருப்பது ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. கமல் வில்லனாக நடித்துள்ள கல்கி இந்த மாதமும், இந்தியன் 2 ஜூலை 12ம் தேதியும் ரிலீஸாகின்றன. விஜய் சேதுபதியின் மகாராஜா வரும் 14ம் தேதி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அதேபோல், விஜய்யின் தி கோட் செப்டம்பர் 5ம் தேதியும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் அக்டோபர் 10ம் தேதியிலும் வெளியாகவுள்ளன. தனுஷின் ராயன் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தப் படங்கள் தவிர, சீயான் விக்ரமின் தங்கலான், சூர்யா நடித்துள்ள கங்குவா, அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி, சிவகார்த்திகேயனின் அமரன் படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் ஜூலை இறுதிக்குள் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது. சிவாவின் அமரன் செப்டம்பர் இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இதுவரை இந்தாண்டு தீபாவளிக்கு எந்ததெந்த படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது தீபாவளி ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளி ரேஸில் முதலிடத்தில் உள்ளது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. இன்னும் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில், அதனையும் உடனடியாக முடித்துவிட படக்குழு பிளான் செய்துள்ளதாம். இதனால் விடாமுயற்சி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி, அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே கங்குவா திரைப்படமும் இந்தாண்டு தீபாவளி ரேஸில் விடாமுயற்சியுடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கங்குவா ஷூட்டிங் முடிந்துவிட்டாலும் கிராபிக்ஸ், போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே கங்குவாவும் தீபாவளி ரிலீஸில் களமிறங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், வெற்றிமாறன் இயக்கும் விடுதலை 2ம் பாகமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாம். விடுதலை முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

சூரி, விஜய் சேதுபதி லீடிங் ரோலில் நடித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், இன்னும் தரமாக இருக்க வேண்டும் என வெற்றிமாறன் தீயாக வேலை செய்து வருகிறார். இதனால் இந்தாண்டு தொடக்கத்திலேயே ரிலீஸாகியிருக்க வேண்டிய விடுதலை 2, இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதை அடுத்து, தீபாவளிக்கு ரிலீஸாகும் எனத் தெரிகிறது. இந்த வரிசையில் கவினின் 5வது படமும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC திரைப்படமும் தீபாவளி ரேஸில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User