மீஞ்சூரில் ஏரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி... மதுபோதையில் கடலில் குளித்தவர் மரணம்

சென்னை அருகே இருவேறு பகுதிகளில், நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

May 02, 2024 - 12:29
0 329
மீஞ்சூரில் ஏரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி... மதுபோதையில் கடலில் குளித்தவர் மரணம்

மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள், கிருஷ்ணாசிங் - பிண்டுகுமாரி தம்பதி. இவர்களது மகனான கிரண்(23), சென்னையில் உள்ள  தனியார் பொறியியல்  கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (மே1) அரசு விடுமுறை என்பதால், தனது நண்பர்களுடன் மீஞ்சூரை அடுத்த கல்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். 

கிரணுக்கு நீச்சல் சரிவர தெரியாத நிலையில் ஏரியின் ஆழத்திற்கு சென்றவர் நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்று முடியாமல் போகவே, மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் இரவு முழுவதும் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், இன்று (மே 2) அதிகாலையில் கிரணின் உடல் கரை ஒதுங்கியது. இதனையடுத்து   உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல், சென்னை மூலக்கடை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் (40) என்பவர் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். மதுபோதையில் அரங்கம்குப்பம் அருகில் கடலில் குளிக்கச் சென்றபோது ராட்சத  கடல் அலையில் சிக்கியுள்ளார். அப்போது, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு இருசக்கர வாகனத்தில் பழவேற்காடு அரசு மருத்துவமனையில்  அனுமதித்துள்ளனர்.

செந்தில்நாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்பாலைவனம் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User