மீன்பிடிக்க சென்றபோது விபத்து...ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பலி...

Apr 08, 2024 - 03:17
0 263
மீன்பிடிக்க சென்றபோது விபத்து...ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பலி...

பெரியபாளையம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜுவ் காந்தி. இவரது மகன் வெற்றி, அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் என்பவரது மகன் கவின் அதே பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல்-7) விடுமுறை தினம் என்பதால் வெற்றியும், கவினும் மீன்பிடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றனர். இருவரும் தண்ணீரில் இறங்கிய நிலையில், நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். அப்போது ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம் என்பவர் சிறுவர்கள் நீரில் மூழ்குவதைக் கண்டு கூச்சலிட்டார். விரைந்து வந்த கிராம மக்கள் நீரில் மூழ்கிய  சிறுவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்க சென்றபோது  சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User