அதிமுக என்ன ஆனாலும், எனக்கு இனி  கவலை இல்லை - பண்ருட்டி ராமச்சந்திரன்

ராம விலாஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி, அதில் பிரியாணி போட்டால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் அதிமுக இருப்பதாக தோன்றுகிறது

Nov 10, 2024 - 15:41
0 453
அதிமுக என்ன ஆனாலும், எனக்கு இனி  கவலை இல்லை - பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுக என்ன ஆனாலும், எனக்கு இனி  கவலை இல்லை. அதிமுக இணைப்பு என்பது இலவு காத்த கிளியாகதான் இருக்கும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று தனது 88வது பிறந்தநாளை கொண்டாடிய பண்ருட்டி ராமச்சந்திரன் குமுதம் செய்திகளுக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எம்ஜிஆரின் கொள்கைகள் வாழ வேண்டும். அதிமுக என்பது வெறும் முகம் தான் உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக இருக்கிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் மக்கள் அந்தக் கூட்டணியை தோற்கடிக்கவில்லை என்றார்.

மேலும்,அதிமுக ஆஹா, ஓஹோ என வளர்வதாக சொல்கின்றார்கள். 2026ல் உண்மை தெரியும். இனி எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக செயல்படும் எண்ணம் எனக்கு இல்லை.ராம விலாஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி, அதில் பிரியாணி போட்டால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் அதிமுக இருப்பதாக தோன்றுகிறது என காட்டமாக தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 2
Love Love 0
Funny Funny 1
Wow Wow 14
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User